மஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்

Report

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது போராளி ஒருவர் கண்ணில் காயமடைந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் வைத்திருந்த ஆயுதத்தினால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடரான விசாரணைகளை IGPN (காவல்துறையினருக்கான காவல்துறை) இடம் ஒப்படைத்துள்ளது. கண்களில் காயமடைந்த போராளி எட்டு நாட்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.

சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒரு வருட நிறைவைக் கொண்டாடும் விதமாக பரிசில் நான்காயிரம் (உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி) வரையான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

place d'Italie பகுதியில் பலத்த வன்முறை வெடித்திருந்தது. பின்னர் காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

504 total views