இஸ்லாமை விமர்சித்ததால் சர்ச்சைக்குள்ளான இளம்பெண்ணுக்கு ஆதரவாக பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி!

Report

இஸ்லாமை விமர்சித்ததால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இளம்பெண்ணுக்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இஸ்லாமை விமர்சித்ததற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட Mila (16) என்ற இளம்பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ள மேக்ரான், மதங்களை விமர்சிப்பதற்கான உரிமையும் அரசியல் சாசனத்தில் அடங்கியுள்ளது என்பதால், அந்த பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இஸ்லாமை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த Milaவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல வாரங்களாக, இந்த நாட்டில் பேச்சுரிமை இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்து நாடு முழுவதும் எழுந்த விவாதங்களால் பிரிவினைகள் ஏற்படும் சூழல் உருவானது.

இதனால், Milaவின் குடும்பத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டிய ஒரு சூழல் உருவானதோடு, அவளால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.

Mila ஒரு பதின்ம வயதினர் என்பதை நாம் மறந்துவிட்டோம் என்று கூறியுள்ள ஜனாதிபதி மேக்ரான், பள்ளியிலும், அன்றாட வாழ்வில் அவள் எங்கு சென்று வந்தாலும் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமை என்றார்.

அரசு ஏற்கனவே பாதுகாப்பான முறையில் Mila பள்ளி செல்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.

சட்டம் தெளிவாக இருக்கிறது என்று கூறியுள்ள இமானுவல் மேக்ரான், மதங்களை தூஷிக்கவும், விமர்சிக்கவும், அவற்றைக் குறித்து கேலிச்சித்திரங்கள் வரையவும் கூட நமக்கு உரிமை இருக்கிறது என்றார்.

1758 total views