பிரான்ஸில் பயங்கரம்... காவல்துறையை அழைத்த 18 வயதுப்பெண்... தந்தையை கைது செய்த பொலிஸார்!

Report

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் (26/06/2020) வெள்ளிக்கிழமை இரவு Rueil-Malmaison (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. 54 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். சரமாரியாக இடம்பெற்ற இந்த கத்திக்குத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று சனிக்கிழமை (27/06/2020) காலை காவல்துறையினருக்கு அழைப்பெடுத்த அப்பெண்ணின் 18 வயதுடைய மகள், தமது தாயாரை தந்தை கொலை செய்துவிட்டதாகவும் தந்தை தற்கொலை செய்யப்போகிறேன் என கூறியதாக புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டின் உள்ளே கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் கையில் கத்தியுடன் இருந்துள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்தனர். Hauts-de-Seine நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவ முதல் நாள் (26/06/2020) வெள்ளிக்கிழமை மாலை குறித்த தம்பதியினர் தங்கள் 18 வயது மகளுடன் தங்கியிருந்த தங்குமிடத்தில் நடந்தது. பெற்றோர் வன்முறைச் சொற்களைப் பரிமாறிக் கொண்டனர், இச் சொல்லாடல் சிறுமியை அவ்விடத்திலிருந்து அகலச் செய்தது, வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பரின் வீட்டில் இரவில் தஞ்சம் புகுந்தாள்.

காலையில், தன் பெற்றோரை செல்பேசியில் அழைத்தாள். பின்னர் அவளது தந்தையிடமிருந்து ஒரு குறுந்தகவல் அவளது செல்போனுக்கு வந்தது, அது ஒரு திகிலூட்டும் செய்தி, அவர் தனது தாயைக் கொன்றதாக அறிவித்து, தற்கொலை செய்யப் போவதாகக் கூறினார் என்ற செய்தி, உடனடியாக அச்சிறுமி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மனைவியின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் குடும்ப வன்முறையால் கொலை செய்யப்பட்ட 34 ஆவது பெண் இவராகும்.

2019 ஆம் ஆண்டில் மொத்தமாக 126 பெண்கள் குடும்ப வன்முறை காரணமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.

1908 total views