உள்ளாட்சித் தேர்தலில் இம்மானுவல் மக்ரோனின் கட்சி வரலாற்றில் முதன்முறையாக பெரும் பின்னடைவு!

Report

ஆளுங்கட்சிக்கு முன், மிகச்சிறிய கட்சியான பசுமைக் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் பசுமைக் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக, இதுவரை மக்களிடையே பெருமளவில் தாக்கம் எதையும் ஏற்படுத்தாத ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஓ மார்செ கட்சி மிக மோசமாக தோல்விகளை சந்தித்துள்ளது.

நாட்டு மக்கள் தனக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கூறியுள்ள இம்மானுவல் மக்ரோன், 60 சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்க வராததே இந்த தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

22 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன.

தோல்விகளைத் தொடர்ந்து இம்மானுவல் மக்ரோன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய இருப்பதாக செய்திகள் உலாவருகின்றன.

ஏற்கனவே, இம்மானுவல் மக்ரோன் மீது, அவர் பணக்கார்களின் ஜனாதிபதி, அவர் சாதாரண மக்கள் அணுக இயலாத இடத்தில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஏற்கனவே நாட்டில் கொரோனாவால் குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் எதற்காக வாக்களிக்கச் செல்லவேண்டும் என மக்கள் எண்ணியிருக்கலாம் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

883 total views