முன்னாள் பிரதமருக்கும் அவரின் மனைவிக்கும் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை!

Report

முன்னாள் பிரதமர் பிரான்சுவா பியோனுக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்த போது, ஊழல் மேற்கொண்டதற்காகவும், பொதுசொத்தை கையாடல் செய்த குற்றத்துக்காகவும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரும் அமைச்சருமான François Fillon மற்றும் அவரது மனைவி Pénélope Fillon இற்கும் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, இதே வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான Marc Joulaud இற்கும் மூன்றாண்டுகள் தண்டனையும் €20,000 தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

தவிர, குறித்த மூவருக்கும் இரு மில்லியன் வரையான பணத்தினை பாராளுமன்றத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பிரான்சுவா பியோன் அதிக செல்வாக்குடன் ஜனாதிபதி ஆவார் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1088 total views