பாரிசில் காவல்துறை அதிகாரி மீது அதிகாலை நடந்த தாக்குதல்: கழுத்து - கன்னத்தில் வாள் வெட்டு!

Report

காவல்துறை பாதுகாப்பு உதவியாளர் (adjoint de sécurité) அதிகாரி ஒருவருக்கே இந்த வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குறித்த அதிகாரி 'சேவையில் இருந்திருக்கவில்லை' என அறிய முடிகிறது.

28 ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:00 மணி அளவில் மத்திய பாரிசின் Boulevard Sébastopol இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரியின் கழுத்து மற்றும் கன்னத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வாள் ஒன்றினால் இந்த வெட்டு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்குட்பட்டிந்த அதிகாரி ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாரிஸ் நகர காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

1341 total views