பிரான்ஸின் தற்போதைய நிலை தொடர்பில் நாட்டின் புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Report

கொரோனா வைரஸ் ஊரடங்கின் தாக்கத்தால் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.8 சதவீதம் சரிந்துள்ளது என தேசிய புள்ளிவிவர நிறுவனமான INSEE தெரிவித்துள்ளது.

இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வீழ்ச்சி முன்னர் கணித்ததை விட மேலானது, ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரான்ஸின் ஜிடிபி வீழ்ச்சி மோசமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் நடுப்பகுதியிலிருந்து மே மாத தொடக்கத்திற்கு இடையில் ஊரடங்கை அமல்படுத்தியதன் விளைவாக அத்தியாவசியமற்ற செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதே 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சிக்கு காரணம் என INSEE அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக முதல் காலாண்டில் பிரான்ஸின் ஜிடிபி 5.3 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக மதிப்பிட்டிருந்த INSEE, தற்போது முதல் காலாண்டில் 5.9 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது காலாண்டின் புள்ளிவிவரம், பிரான்ஸ் பொருளாதாரம் தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக சரிந்து வருவதை மற்றும் தொடர்ந்து மந்தநிலையில் உள்ளதை காட்டுகிறது.

872 total views