பாரிஸில் கத்திக் குத்து தாக்குதல்; நால்வர் காயம்

Report

பிரான்ஸ் தலைநகரான பாரஸில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் பாரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்ஃடோ பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே இன்று இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் காயமடைந்த நால்வரில் இருவரின் நிலை கலைக்கிடமாகவுள்ளதாக தெரிவித்த பாரிஸ் பொலிஸ் திணைக்களம், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

2015 சார்லி ஹெப்டோ தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு (Charlie Hebdo shooting) என்பது 07 ஜனவரி 2015 அன்று முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வாகும்.

இதில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அல் காயிதா அமைப்பின் ஏமன் நாட்டுக் கிளை பொறுப்பேற்றுள்ளது.

4046 total views