பிரான்சில் இடம்பெற்ற கொடூரம்; வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை!

Report

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் ஒருவா் நேற்று மாலை தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளார்.

பாடசாலை ஒன்ரின் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சென்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் 18 வயதான நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டி விமா்சித்தமையினால் கோபமடைந்த குறித்த நபர் ஆசிரியரை கொன்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரான்ஸ் அதிபரின் உத்தரவு மக்ரோன் லெபனான்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்தாக கூறி நேற்று மாலை 5 மணி அளவில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான்,

இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிக் ஒருவர் கூறுகையில்,

தாக்குதல் நடத்திய மர்மநபரிடம் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் இருந்தது. ஆயுதங்களை கீழே போடுமாறு நாங்கள் உத்தரவிட்டோம் அதற்கு மர்மநபர் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

3652 total views