ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஜேர்மன் பெண் பெர்லினில் கைது!

Report

ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஜேர்மன் நாட்டு பெண் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், பெர்லினில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.

ஜேர்மனை சேர்ந்த நசீம் என்ற பெண்மணி, கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவுக்கு சென்றிருக்கிறார்.

அங்கே தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டதுடன் 2015ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதி ஒருவரையும் மணமுடித்துக் கொண்டார்.

பின்னர் ஈரானில் தங்கியிருந்து சிறு சிறு வேலைகளை செய்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு சிரியாவுக்கு இருவரும் சென்ற போது குர்திஷ் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டு ஜிகாதிகளை நாடு கடத்திய துருக்கி, நசீமையும் ஜேர்மனிக்கு நாடு கடத்தியது.

இங்கே பெர்லினில் வந்திறங்கிய நசீம் கைது செய்யப்பட்டு, பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதேபோன்று ஏழு பிள்ளைகளின் தந்தையான நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தமை குறிப்பிடத்தக்கது.

1190 total views