ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

Report

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் என்றால் என்ன? அதாவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகும்.

அப்படி உருவாகும் ஆன்டிபாடிகள் ஒருவரது உடலில் இருந்தால், மீண்டும் கொரோனா வைரஸ் அவரது உடலுக்குள் நுழைந்தால், அந்த ஆன்டிபாடிகள் வைரஸை எதிர்த்து போரிடும்.

அதனால் அவர்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் குறைவு.

ஆக, இப்படிப்பட்டவர்கள், அதாவது, உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் வழங்கப்படும்.

அவர்கள் சமூக விலகலிலிருந்து விடுபட்டு மீண்டும் தங்கள் பணிகளுக்கு திரும்ப இயலும்.

அத்துடன் அவர்களால் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களாக பணியாற்றவும் இயலும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

6252 total views