ஜேர்மன் மருத்துவர்களுக்கு இலவச அனுமதி... எங்கு தெரியுமா?

Report

கிரேக்க தீவான கோஸ் திங்கள்கிழமை முதல் ஜேர்மன் மருத்துவர்களுக்கு இலவச அனுமதி வழங்கும் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 170 மருத்துவர்கள் கோஸ் திவுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

ஜேர்மனியில் கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதுடன் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்வதாக கிரேக்க சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 1 ஆம் திகதி கிரீஸ் தனது பிராந்திய விமான நிலையங்களை பயணிகள் போக்குவரத்திற்கு திறக்க அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியில் இருந்து மருத்துவர்கள் குழுவுடன் சிறப்பு விமானம் கோஸ் தீவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் கால் பகுதி சுற்றுலாவைச் சார்ந்து இருப்பதால், ஐரோப்பா மீண்டும் விமான பயணத்திற்கான அனுமதியை வழங்க இருக்கும் நிலையில், கிரேக்கத்தில் விடுமுறையை கழிக்கவிருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பை அரசாங்கம் உறுதியளிக்க முயன்று வருகிறது.

கொரோனாவால் கிரேகத்தில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 200-கும் குறைவு என்றே தெரிவித்துள்ளனர்.

815 total views