ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 955 பேருக்கு கொரோனா

Report

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 955 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,09,653 ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஸ்பூட்னிக் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,148ஐ எட்டியுள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் இதுவரை கொரோனா தொற்று பாதித்த 1,92,000க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3107 total views