ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி

Report

ஜெர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்ட ஒருவரின் பையை காட்டுப்பன்றி ஒன்றுதூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று .

பெர்லினுக்குமேற்கே உள்ள ஏரி ஒன்றின் கரையில் ஒருவர் சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருந்திருக்கிறார் .

அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று, அவரது லாப் டாப் வைத்திருக்கும் பையைத் தூக்கிக்கொண்டு ஓட, தான் எவ்வாறு இருக்கின்றோம் என்பதையோ அல்லது , அங்கு பலர் தன்னைப்போலவே ஏரியின் அழகை ரசித்துக்கொண்டிருப்பதையோ பற்றிக் கவலைப்படாமல், குறித்த நபர் பன்றியைத் துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார்.

அதன் பின்னர் அந்த நபர் எழுப்பிய சத்தத்தில், பையை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது அந்த காட்டுப்பன்றி.

இந்நிலையில் அதே பகுதியில் குளிக்க வந்த Adele Landauer என்ற பெண், சம்பந்தப்பட்டவரின் சம்மதத்துடன் இந்த காட்சிகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்

புகைப்படத்திற்கு, ’திருப்பித் தாக்கும் இயற்கை, மனிதனை வேட்டையாடும் காட்டுப்பன்றி’ என பெயரும் வைத்திருக்கிறார் Adele.

12356 total views