ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: 5 நபர்களை கத்தியால் குத்திய வாலிபர்!

Report

ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார்.

இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை அவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றார். அவரை சிலர் தாக்கினார்கள்.

இதனால் மேலும் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் குத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.

குடும்ப பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

677 total views