ஏலத்திற்கு விடப்பட்ட ஹிட்லர் டாய்லெட்; இவ்வளவு விலையா?

Report
0Shares

ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் இருக்கை 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிகவும் கொடூரமாக பார்க்கப்படும் நபர் என்றால் அது ஹிட்லர் தான். ஏப்ரல் 20ஆம் தேதி 1889 இல் பிறந்த இவர் கொடூரமான மனிதராக வாழ்ந்தார். இவரை ஒரு தேசியவாத தலைவராக கருதும் பலர் உள்ளனர்.

ஹிட்லரின் உத்தரவின்பேரில் மில்லியன் கணக்கான மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று உலகமெங்கிலும் உலக மக்கள் அடோல்ப் ஹிட்லரின் பொருட்களை மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து வாங்குகின்றன.

அந்தவகையில் ஹிட்லரின் கழிப்பறை ஒன்று ஏலம் விடப்பட்டது. இந்த கழிப்பறை இருக்கைகள் அதாவது இந்திய மதிப்பில் 14,000 பவுண்டுகளுக்கு, அதாவது இந்திய மதிப்பு - 14,23,529 ரூபாய் வாங்கியுள்ளனர்.

ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவாவின் பல பொருட்களை ஏலம் விடப்பட்டது. இந்த மர கழிப்பறை தாள் பெர்கோப்பில் உள்ள ஹிட்லரின் தனியார் குளியலறையில் நிறுவப்பட்டது.

அதே நேரத்தில் ஹிட்லரின் மனைவி ஈவாவின் பொருட்களின் ஏலம் விடப்பட்டது. இவரின் உடைகள் 1300 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டது. ஹிட்லரின் படத்துடன் கூடிய அவரது ஷேவிங் குவளையும் ஏலம் விடப்பட்டது. இது 15600 பவுண்டுகள் பெறப்பட்டது. ஹிட்லரின் சீப்பு மற்றும் முடியும் ஏலம் விடப்பட்டது. இந்த சீப்பில் இருந்து முடி அகற்றப்பட்டு 1650 பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டது.

127 total views