Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான Rassemblement National (RN) இன் தலைவர் மரீன் லூ பென் வெற்றி பெற்றால், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகப் பலர் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு நினைப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் வெற்றி பெற்றால் அனைத்துப் பிரெஞ்சு மக்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன். பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டும் என அவர்கள் நினைப்பது தவறானது” என மரீன் லூ பென் தெரிவித்துள்ளார்.
Marianne வார இதழுக்காக Ifop நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, லூ பென் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், பிரெஞ்சு மக்களில் 21 சதவீதத்தினர் நாட்டை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக, பிரெஞ்சு முஸ்லிம்களில் 46 சதவீதத்தினரும், யூத மதத்தைச் சேர்ந்தவர்களில் 44 சதவீதத்தினரும், ஜீன்-லூக் மெலன்சோனின் La France Insoumise (LFI) கட்சி ஆதரவாளர்களில் 43 சதவீதத்தினரும் இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளதாகக் கருத்துக்கணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவுகள் தொடர்பாக CNews தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்த லூ பென், பிரான்ஸ் என்பது சம்பந்தப்பட்ட மக்களின் தாய்நாடு என்றும், அவர்கள் பிரெஞ்சுக் குடிமக்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நினைப்பது முற்றிலும் தவறு. நமக்கு ஒரேயொரு நாடுதான் உள்ளது. எனது அரசியல் கொள்கைகளுடன் அவர்கள் முரண்படலாம். இருப்பினும், நான் ஜனநாயகத்தையும் அனைத்து அரசியல் கருத்துகளையும் மதிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும், மதச் சுதந்திரத்தையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் முழுமையாக மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாம் பிரெஞ்சுக் குடியரசின் கொள்கைகளுடன் இணக்கமாக இருக்க முடியும் எனத் தான் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
“குடியரசுக்கு எதிரானது ஷரியத் சட்டமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும்தான். அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவே எனது நடவடிக்கைகள் அமையும். சாதாரண முஸ்லிம் மக்கள் அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
அவர்கள் தங்களது மதச் சடங்குகளைத் தடையின்றித் தொடர்ந்து பின்பற்றலாம்” என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிவதைத் தடைசெய்வது தொடர்பாகப் பொதுவாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் லூ பென் தெரிவித்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தடையை ஒரே கட்டமாக நடைமுறைப்படுத்தாமல் படிப்படியாக அமல்படுத்துவதாகவும், முதற்கட்டமாகப் பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் அதனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, குடியேற்றம், மதச்சார்பின்மை மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விவகாரங்கள் பிரான்ஸின் அரசியல் விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், லூ பென்னின் இந்தக் கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அமெரிக்கா - மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா பகுதியில் ஆஸ்திரேலிய சகோதரர்கள் இருவர் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கு தலா 158 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில், 33 வயதான காலம் ராபின்சன், 30 வயதான ஜேக் ராபின்சன் ஆகிய ஆஸ்திரேலிய சகோதரர்களும், அவர்களது 30 வயதான அமெரிக்க நண்பர் கார்ட்டர் ரோட் என்பவரும் மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்காகச் சென்றிருந்தனர்.
அங்கு கடற்கரைப் பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தபோது, அவர்களது வாகனங்களில் இருந்த டயர்கள் உள்ளிட்ட உதிரிப்பாகங்களைத் திருட சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற மூவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அருகிலிருந்த கிணறு ஒன்றில் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கு தலா 158 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூவர் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.