என்ன! தினமும் பீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?

Report

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை காணவே தேவை இல்லை என்பது பழமொழி. ஆனால், ஒரு நாளுக்கு அளவாக ஒரு தடவை பீர் குடித்தாலும் கூட மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை என்று கூறினால் நம்புவீர்களா?

நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரை ஒப்பிட்டுப் பார்த்ததில் ஆப்பிளில் 52 மற்றும் பீரில் 43 என்ற வீதத்தில் கலோரிகள் உள்ளதாய் தெரியவந்துள்ளது. ஆச்சரியமாக உள்ளதல்லவா இப்படி பட்ட சுவரஸ்யமான தொகுப்புகளை தான் இப்பதிவில் காணபோகிறோம்.

ஆப்பிளுடன் ஒப்பிடுகையில் பீரில் துளி அளவுக் கூட கொழுப்புச் சத்து இல்லையாம். சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை ஒப்பிடுகையில் ஆப்பிளில் 1 மி.கி சோடியமும், பீரில் 4 மி.கி. சோடியமும் உள்ளதாம். மேலும் ஆப்பிளில் 107 மி.கி பொட்டாசியமும், பீரில் 27 மி.கி பொட்டாசியமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்போஹைட்ரேட் அளவு ஆப்பிளில் 14 கிராமும் (மொத்த சத்துகளின் அளவில் இருந்து 4%), பீரில் 3.6 கிராமும் இருக்கிறது. அனால் ஆப்பிளில் வைட்டமின் சி 4.6 மி.கி இருக்கிறது. பீரில் வைட்டமின் சத்து ஏதும் இல்லை. எலும்புக்கு வலு சேர்க்கும் கால்சியம் பொறுத்தவரை, ஆப்பிளில் 6 மி.கி மற்றும் பீரில் 4 மி.கி இருக்கிறது.

தலா நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரை பரிசோதித்ததில் ஆப்பிளில் 0.3 மி.கி மற்றும் பீரில் 0.5 மி.கி புரதச்சத்து இருக்கிறதாம். ஆப்பிளில் 5 மி.கி மற்றும் பீரில் 6 மி.கி அளவு மக்னீசியத்தின் அளவு இருக்கிறது. ஆப்பிளில் 10 மி.கி சர்க்கரையின் அளவு இருக்கிறது. பீரில் சர்க்கரை அளவு இல்லை.

ஏறத்தாழ இரண்டிலுமே ஒரே அளவில் தான் சத்துகள் இருக்கிறன்றன என்றாலும், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியின் அடிப்படையில், அதிக அளவில் பீர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

31792 total views