குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைக்கின்றீகளா? அப்படி எனில் இது உங்களுக்கு தான்!

Report
116Shares

பொதுவாக பெற்றோர்கள் எல்லோருமே குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய அதிக அக்கறை காரணமாக தாய்மார்கள், குழந்தைகளை கட்டாயப்படுத்தி, அதிகம் உண்ண வைக்கின்றனர்.

குழந்தைகள் இயற்கையோடு அதிகம் இயைந்து இருக்கிறார்கள். அன்புடன் கொடுக்கும் உணவைக்கூட அவர்கள் மறுத்தால், உண்மையில் அவர்களுக்குப் பசியில்லை என்பதே பொருள். இதனை தாய்மார்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்

அதைப் புரிந்துகொள்ளமல் கட்டாயப்படுத்தி குழந்தைகளை உண்ண வைக்கும்போது குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன.

இன்னொரு உளவியல் சார்ந்த பிரச்சினை பொதுவாக அனேக குடும்பங்களில் வருகிறது. அதாவது பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவிடமுடியாமல் போகிறது.

இந் நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிற்கு தங்கள் அன்பை ஈடுகட்டுவதாக நினைத்து துரித உணவுகளை வாங்கிக் கொடுக்கின்றனர், இதனால் பெரும்பாலும் குழந்தைகளின் உடல்நலம் கெடுகின்றது.

இவ்வாறான பெற்றோர்கள் கொஞ்சநேரம் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கி அவர்களிற்கான அன்பை பகிர்ந்துகொள்ளலாம்.

அதோடு நீங்கள் சமைத்த உணவை குழந்தைக்கு ஊட்டி விடும்போது உங்கள் அன்பும் அதில் கலந்துள்ளது என்பதையும் மறவாதீர்கள்.

4500 total views