பிராந்தி, விஸ்கி, பீர் தயாரிப்பில் கடும் சிக்கல் - என்ன காரணம்?

Report

வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பிராந்தி, விஸ்கி, பீர் ஆகியவர்றின் தயாரிப்பில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

தென்மேற்கு பிரான்ஸில் 600 வருடம் பழமையான காக்நாக் பிராந்தியை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வகை பிராந்தியை தயாரிக்க பயன்படும் திராட்சை அதிக வெப்பம் காரணமாக அதிக இனிப்பு தண்மை கொண்டவையாக மாறிவிடுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்காட்லாந்தில் விஸ்கி தயாரிப்பிலும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வறட்சியால் நல்ல தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நல்ல நீர் கிடைக்காததால் விஸ்கி தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலைகளை வெயில் காலத்தில் மூடும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஸ்கிக்கு ஏற்பட்ட அதே நிலை தான், பீர் தயாரிப்பிற்கும். நீர் தட்டுப்பாடு, விளைச்சல் பாதிப்பு ஆகிய காரணங்களால் பீர் தயாரிப்பாளர்கள் தயாரிப்பு இன்றி சரிவை சந்தித்துள்ளனர்.

3269 total views