இரண்டு பேரைக் காதலித்த ஒரே பெண்.... திருமணத்திற்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்...

Report
68Shares

திருமணம் நிச்சயமான பெண்ணை முன்னாள் காதலன் கடத்திய பரபரப்பான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் உடும்பானூரை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்திருக்கிறார். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும் காதலித்த நிலையில் சிவாவுக்கு துபாயில் வேலை கிடைத்தது. ஆகவே அவர் அங்கு சென்றிருக்கிறார்.

உமாவிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கவே உமாவும் பெங்களூரு சென்று விட்டார். இந்நிலையில் உமாவுடன் பணி புரிந்த சுரேஷ் கேரளா மாநிலம் எரட்டு புழாவை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் அலுவலகத்தில் காதல் மலர்ந்தது. சுரேஷிற்கும் குஜராத்திற்கு மாற்றலாகிவிட அங்கு சென்ற நிலையிலும் உமாவும் சுரேஷும் காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் துபாயில் இருந்த முதல் காதலன் சிவா கேரளா வந்து உமாவிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூற அதற்கு சம்மதித்த உமாவின் குடும்ப உறுப்பினர்கள் திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர். நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் இது பற்றிய தகவல் குஜராத்தில் உள்ள சுரேஷிற்கு எப்படியோ தெரிய வந்துள்ளது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த சுரேஷ் உடனடியாக விமானம் மூலம் கேரளா வந்திருக்கிறார். திருமணத்திற்காக உடைகள் எடுக்க உமா மற்றும் சிவா குடும்பத்தினர் கொச்சியில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தனர்.

உடனடியாக தயாராக இருந்த நண்பர்களுடன் அங்கு சென்ற சுரேஷ் உமாவைக் கடத்தி செல்ல முயன்றார். இதனையடுத்து உமாவின் வருங்கால கணவரும் சகோதரரும் இதனை தடுக்க முயன்றனர்.

அந்தப்பகுதியே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு விவகாரம் பெரிதானதால் பொலிஸார் வந்து பிரச்னையை விசாரித்தனர். அப்போதுதான் இந்த முழு தகவலும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக சுரேஷ் மற்றும் நண்பர்களை காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3030 total views