வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி: நேர்மாறாக நடந்து முடிந்த சம்பவம்

Report
116Shares

வேலூர் அருகே பெற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ய நினைந்த காதலர்கள் விபத்தில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது.

வேலூர் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை பகுதியை சேர்ந்த சரத்குமார் அவருடன் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஜெயப்ரதாவை காதலித்து வந்தார்.

தங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

திட்டமிட்டபடியே நேற்றிரவு தனது காதலி ஜெயப்ரதாவோடு வீட்டை விட்டு வெளியேறிய சரத்குமார் பைக்கில் சோளிங்கர் சென்று அங்கு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

அதன்படி சோளிங்கருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடுமாறிய பைக் அங்கிருந்த பாலத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

உடல்களை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி மரணத்தை சந்தித்தது அங்குள்ளோரை மாறாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

5792 total views