மூன்று சிறுமிகளை கொடூரமாக கொன்ற பெண்

Report
135Shares

இந்தியாவில் கணவரின் தகாத உறவால் மனைவி தனது மகன்களுடன் சேர்ந்து மூன்று சிறுமிகளை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அந்த நபருக்கு, திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ள ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு நபரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து ஆத்திரமடைந்த மனைவி தனது இரண்டு மகன்கள் மற்றும் மூன்று உறவினர்களுடன் கணவரின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் கள்ளக்காதலிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் அவரின் 10-லிருந்து 14 வரையிலான மகள்களை தன்னுடன் வந்தவர்களை வைத்து கொடூரமாக கொன்றுள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மூவரின் சடலத்தை கைப்பற்றிய அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மற்ற மூவரை தேடி வருகிறார்கள்.

இதனிடையில் மூன்று சிறுமிகளும் கொல்லப்படுவதற்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

5055 total views