சென்னை தொழிலதிபர் வீட்டில் மர்மமாக இறந்துகிடந்த வேலைக்கார பெண்

Report
34Shares

தொழிலதிபர் வீட்டில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் முருகன் என்பவரது வீட்டில் வேலை செய்பவர் லட்சுமி. இவர் நேற்றிரவு தனது வேலைகளை முடித்துவிட்டு, முதல் மாடியில் தூங்கசென்றுள்ளார்.

காலையில் அவர் எழுந்து வீட்டு வேலைகள் செய்ய வரவில்லை. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அவரைத் தேடினர். அப்போது முதல் மாடியில் உடலில் காயங்களுடன் லட்சுமி இறந்துகிடந்தார்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொழிலதிபர் முருகனிடம் பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

லட்சுமியின் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

2122 total views