துபாயில் மலர்ந்த காதல்: 10 ஆண்டுகள் கழித்து காதல் மனைவிக்கு கணவரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய மீனவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

முனியசாமி என்பவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்துவந்தபோது, அங்கு சேக் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்த மும்தாஜ் என்பரை காதலித்து துபாயில் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பி வசித்துவந்துள்ளனர்.

கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை சமையலறையில் இருந்த மும்தாஜை முனியசாமி திடீரெனக் கீழே தள்ளி, கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மும்தாஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மும்தாஜின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, மும்தாஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், கொலைசெய்யப்பட்ட மும்தாஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிசார் தப்பி ஓடிய மும்தாஜின் கணவர் முனியசாமியைத் தேடிவருகின்றனர்.

10314 total views