சிறுமிகளை கடத்தி திருமணத்திற்காக விற்கும் கும்பல் கைது!

Report
99Shares

இந்தியாவின் ஆந்திரா பகுதியில் வசிக்கும் அழகான சிறுமிகளை கடத்தி, வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் திருமணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலில், இரண்டு பேரை கைதராபாத் பொபலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில், சிறுமிகளை கடத்தி விற்கும் சம்பவம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸாருக்க கிடைத்த தகவலையடுத்தே, நேற்று (சனிக்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் பல மாநிலங்களில் உள்ள தாரகர்கள், அழகான முஸ்லீம் சிறுமிகளை கடத்தி, வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் திருமணத்திற்காக அனுப்பி வைக்கின்றனர்.

அங்குள்ளவர்கள் இவர்களை திருமணம் செய்து குறித்த காலம் வாழ்க்கை நடத்திவிட்டு, மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அதன் பின்னர் வேறு சிறுமிகளை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொள்கின்றனர்.

குறித்த சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3721 total views