ஒடிசாவில் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Report
18Shares

ஒடிசாவில் ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆள் இல்லாத குட்டி விமானங்களை குறிவைத்து தாக்கும் திறன் உடையதாகும். சோதனையின் போது இலக்கை துல்லியமாக சென்று ஆகாஷ் தாக்கியது.

மேலும் ஆகாஷ் ஏவுகணையானது ராடர் உள்ளிட்ட நவீன தொழில் நுட்ப கருவிகளுடன் இணைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன.

ஆகாஷ் ஏவுகணை வெற்றியை நேரில் பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி விஞ்ஞானிகளை பாராட்டினார்.

இதை தொடர்ந்து ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஓவால் முழுமையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ஆகாஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வானில் 25கிமீ வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது.

ஆட்டோமெடிக் மெக்கானிசம் கொண்ட இந்த ஏவுகணையானது வானில் சுழன்று சென்று எந்த திசையிலும் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது இதன் சிறப்பம்சமாகும்.

1105 total views