உலக சாதனையில் இடம்பிடித்த மட்டுங்கா ரயில் நிலையம் : எதற்காகனு தெரியுமா?

Report
33Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

மத்திய ரெயில்வே நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மகாராஷ்டிர மாநில ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மட்டுங்கா ரெயில் நிலையம் மும்பை நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த ரெயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க மத்திய ரெயில்வே துறையின் பொது மேலாளர் டி.கே. ஷர்மா திட்டமிட்டார்.

இதையடுத்து, பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர், ரெயில்வே போலீசார், சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என 41 பேர் மட்டுங்கா ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா குல்கர்னி என்பவர் தலைமையில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்த குழுவினர் கடந்த ஆறுமாத காலமாக மட்டுங்கா ரெயில் நிலைய நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

2049 total views