கடனை திருப்பி கேட்ட இளம்பெண் : கல்லகாதலன் செய்த வெறி செயல்

Report
563Shares

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளம் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் கள்ளக்காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமம் ஆலமரக்கோட்டை பகுதியில் உள்ள கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் முனிரா என்பது தெரியவந்தது.

சென்னை எர்ணாவூரை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மனைவியான முனிரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது, அவருடன் பணிபுரியும் மதுரைவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. மேலும், மதுரைவேலுக்கு அவ்வப்போது பணத்தை முனிரா கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில், தஸ்கதீர் மரணமடைய முனிரா தனது தாயின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள சிலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மதுரைவேலுக்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், தான் இதுவரை கொடுத்த பணத்தை திருப்பு தருமாறு முனிரா மதுரைவேலிடம் கேட்டு நச்சரித்துள்ளார்.

அந்நிலையில், சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி முனிராவை பேருந்தில் மதுரைவேல் அழைத்து சென்றுள்ளார். அப்போது, கிழக்கு கடற்கரை கடப்பாக்கம் பகுதியில் பேருந்து பழுதாகி நின்றுவிட்டது.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, அந்த பகுதியில் உள்ள ஆலம்பர கோட்டைக்கு முனிராவை அழைத்து சென்று மதுரைவேல் உல்லாசமாக இருந்துள்ளார்.

அதன்பின் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, முனிராவை கட்டையால் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்த மதுரைவேல், அவரை மணலில் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து விட்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

18339 total views