எச்1பி விசா... அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி

Report
19Shares

செய்யலை... செய்யலை... பரிசீலனை செய்யலை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எச்1பி விசா வைத்துள்ளவர்களை உடன் வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்திய பொறியாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) நிர்வாகி ஜோனாத்தன் வாஷிங்டன் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டிக்கும் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை ஏதும் நடக்கவில்லை. அந்த சட்டத்தில் மாற்றம் ஏதும் கொண்டு வந்தாலும், எச்.1பி விசா வைத்துள்ளவர்கள் உடன் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அவர்கள் ஒரு வருடம் நீட்டிப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்துங்கள் என்ற அதிபரின் முடிவுக்கு ஏற்ப பல கொள்கைகளை ஆலோசித்து வருகிறோம். இதில் பணி நிமித்தமான விசாவும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1755 total views