கருனை கொலை செய்ய கோரி மணு கொடுத்த தம்பதி..நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காரணம்!

Report
639Shares

மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர், தங்களால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை என்றும் இயங்கும் போதே தங்களைக் கருணைக்கொலை செய்யவேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நாராயண் லவத் (88), ஐராவதி (78). தெற்கு மும்பையில் உள்ள சார்னி சாலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

உடன்பிறப்புகள் யாரும் உயிருடன் இல்லை என்று தெரிவிக்கும் அவர்கள், உயிருடன் நன்றாக இயங்கும்போதே கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய நாராயண், ''நாங்கள் நாட்டின் அரிய வளங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களால் சமூகத்துக்கோ, எங்களுக்கோ கூட எந்தப் பயனும் இல்லை. இதனால் தீவிர வியாதி ஏற்பட்டு இறப்பு எங்களை நோக்கி வரும்வரை நாங்கள் காத்திருப்பது நன்றாக இருக்காது.

இறப்பை நோக்கிப் பயணிப்பவர்களின் வாழ்வில் கருணை காட்ட குடியரசுத் தலைவரிடம் அதிகாரம் உண்டு. அதேபோல வாழ்க்கைச் சிறையில் வாழும் எங்களுக்கும் அவர் இறப்பை அனுமதித்து கருணை காட்ட வேண்டும்.

முன்னதாக நானும் என் மனைவியும் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யலாம் எனவோ, தூக்கில் தொங்கி உயிரை விடவோ யோசித்தோம். ஆனால் அப்போது நாங்கள் இறந்துவிடுவோமா என்று உறுதியாகக் கூறமுடியாது.

சுவிட்சர்லாந்தில் ஓர் அமைப்பு உள்ளது. அதில் இறக்க விரும்புவர்களுக்குக் கட்டணம் இல்லாமலே மருத்துவர்கள் உதவுவார்கள். அதில் நாங்கள் இருவரும் இணைந்தோம். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால், எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.

அதனால் நாங்கள் இயங்கும்போதே கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்று மனு அளித்திருக்கிறோம். ஏற்கெனவே எங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்துள்ள நாங்கள், சொத்துகளை மாநில அரசின் கருவூலத்துக்கு அளிக்க உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

21259 total views