ஆசிரியைகள் செய்த மோசமான காரியம்.. உயிரை விட்ட மாணவி!

Report

கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியைகள் தொல்லை கொடுத்து துன்புறுத்தியது தொடர்பான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கேரளா கொல்லம் நகரை சேர்ந்த கவுரி நெஹா என்ற பள்ளி மாணவிஇ தான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த மாதம் 20ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் ஆசிரியைகளான சிந்து மற்றும் கிரிசண்ட் ஆகியோர் மாணவியை துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இரண்டு ஆசிரியைகளும் மாணவியை துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் சமர்பித்துள்ளனர்.

இந்நிலையில், முன்ஜாமின் கேட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கும் அதனை வழங்ககூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவுள்ளது.

கவுரி எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதனை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

32819 total views