பசியால் அழுத குழந்தைக்கு தாயால் ஏற்பட்ட கொடூரம்!!

Report

பாலுக்காக அழுத 1 வயது பெண் குழந்தையை அதன் தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், தாா் மாவட்டத்தில் தல்வாடி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சோ்ந்த அணிதாசிங் என்பவருக்கு 1 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி அணிதா தனது மாமியாருடன் வீட்டு வாசலில் அமா்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளாா். அந்த நேரத்தில் குழந்தை பாலுக்காக வெகு நேரமாக அழுதுகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து அணிதா வீட்டிற்குள் செல்லவே குழந்தையின் அழுகை நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அணிதாவின் மாமியாா் அக்கம்பக்கத்தினருடன் வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது குழந்தை கழுத்தறுக்கப்பட்டு உயிாிழந்த நிலையில் கிடந்துள்ளது.

அதனை கண்டு அதிா்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக காவல்துறைக்கு புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் காவலா் துறையினா் அணிதாவை கைது செய்து விசாரணை நடத்தினா். குழந்தை வெகு நேரமாக அழுதுகொண்டு இருந்ததால் எாிச்சல் தாங்காமல் குழந்தையை கொலை செய்ததாக அணிதா ஒப்புக் கொண்டாா். ஒரு வயது குழந்தையை அதன் தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2275 total views