பெண் இன்ஜினியர் செய்த காரியம்...

Report

மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக ஆத்திரமடைந்த கணவர் அவரை அடித்து கொலை செய்து எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிபவர் ஹர்ஷிதா(30). இவரது கணவர் சந்திரகாந்த்(35) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஹர்ஷிதாவின் தாய் தனது மகளைக் காணவில்லை என்று பொங்களூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வனப்பகுதியில் கடந்த 6ம் திகதி இளம்பெண் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்பெண்ணின் பிரேத பரிசோதனையில் கொலைசெய்துவிட்டு தீயிட்டு எரித்தது தெரியவந்துள்ளது.

சூளகிரி பொலிசார் பெண்ணின் தடயங்களை அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஹர்ஷிதாவின் தாய் புகார் அளித்த காவல் நிலையத்திற்கும் தடயங்கள் வந்துள்ளது.

தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், கர்நாடக பொலிசார் சூளகிரி வந்து விசாரணை நடத்தி, உடல் பாகங்களை ஆய்வு செய்ததில் புகார் அளித்த ரேகாவின் மகள் ஹர்ஷிதா (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவருடைய கணவர் சந்திரகாந்த் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மனைவியை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலம் பற்றி பொலிசார் கூறுகையில், சந்திரகாந்த்துக்கும், ஹர்ஷிதாவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார். அவருடைய மனைவி ஹர்ஷிதாவுக்கு அலுவலகத்தில் உடன் பணியாற்றும் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனைவியிடம் சந்திரகாந்த் கேட்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், மனைவியை சரமாரியாக தாக்கி சம்பவ இடத்திலே இறந்துள்ளார். பின்னர் தனது நண்பரான ரவீந்தர்சிங் (25) உதவியுடன், தமிழக வனப்பகுதியான கோபசந்திரம் பகுதிக்கு ஹர்ஷிதாவின் உடலை கொண்டு வந்து எரித்து விட்டு தப்பியோடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹர்ஷிதாவின் தாய் ரேகா அளித்த புகார் அடிப்படையில், பெங்களூரு பொலிசார் தலைமறைவாக இருந்த கணவர் சந்திரகாந்த், அவரது நண்பர் ரவீந்தர்சிங் ஆகியோரை கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்துள்ளனர்.

2151 total views