முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்-ராதிகா நிச்சயதார்த்தம்?

Report
68Shares

நாட்டின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகளைத் தொடர்ந்து, அவரது இளைய மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியும் ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஸெல் மேத்தா - மோனா தம்பதியின் 3-வது மகள் ஸ்லோகாவும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் முடிந்தது. வரும் டிசம்பரில் திருமணம் நடைபெறுகிறது.

இதுபோல, முகேஷின் மகள் இஷா அம்பானி, பிரமல் எண்டர்பிரைசஸ் தலைவர் அஜய் பிரமல்-ஸ்வாதி தம்பதியின் மகன் ஆனந்த் பிரமலை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆன்டில்லா’ இல்லத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முகேஷின் இளைய மகன் ஆனந்துக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவலை இருவரின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என ரிலையன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

2854 total views