தந்தையின் செயலால் 10 மாத குழந்தை கொடூரமாக பலி!

Report
456Shares

ராஜஸ்தானில் அமைந்துள்ள சிறப்பு விற்பனையகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து 10 மாத குழந்தையொன்று பலியாகியுள்ளது.

ராஜஸ்தான் - கங்கா நகரில் அமைந்துள்ள குறித்த விற்பனையகத்தில் பெண்ணொருவர் அவரது கணவருடன் 10 மாதக்குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மூன்றாவது மாடிக்கு செல்வதற்காக அங்கிருந்த நகரும் படிக்கட்டில் செல்ல குறித்த தம்பதியினர் முற்பட்டுள்ளனர்.

இதன்போது , கணவர் படிக்கட்டில் இருந்தவாறு செல்ஃபி புகைப்படும் எடுப்பதற்கு மனைவியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , இதன்போது மனைவி கையில் இருந்த 10 மாத பிஞ்சு குழந்தை செல்ஃபி எடுக்க முற்படும் போது தவறி விழுந்துள்ளது.

இதன்போது , நகரும் படிக்கட்டுக்கும் நடைப்பாதைக்கும் இடையில் குழந்தை மோதி கீழ் தளத்தில் விழுந்துள்ளது.

அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போதும் , குழந்தை கீழே விழுந்த போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

15005 total views