சபரிமலைக்கு செல்ல முயற்சித்த 7 இளம்பெண்கள்! தடுத்தி நிறுத்திய பொலிசார்

Report

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்கு முயற்சி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 7 இளம்பெண்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மண்டல மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை, திறக்கப்பட உள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நிலுவையில் இருக்கும் காரணத்தால், சபரிமலைக்கு வரும் இளம்வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள மாநில அரசு கைவிரித்துவிட்டது.

கடந்த ஆண்டு ஐயப்பன் கோவிலுக்கு வருகை தந்த பெண்களை, வலதுசாரி அமைப்பினர் தடுத்து நிறுத்தி விரட்டி விட்ட, சம்பவத்தையடுத்து கேரள அரசு இந்த முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான, சுஜாதா உட்பட 7 இளம்பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

அவர்கள் நிலக்கல் பகுதியை தாண்டி பம்பை வரை வந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் அடையாள அட்டைகளை வாங்கி சோதித்து பார்த்தபோது அனைவருக்குமே சுமார் 40 முதல் 45 வயதுக்குள் உள்ளே இருப்பது தெரியவந்தது.

சபரிமலை மரபுப்படி 10 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளும், 50 வயதுக்கு மேலே உள்ள மூதாட்டிகள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.

இதன் காரணமாக குறித்த 7 பெண்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவ்விக்கப்ப்டுகின்றது.

1277 total views