தரிசனத்திற்கு சென்ற பெண்ணை அடிக்க சென்ற தீட்சிதர்..! சிதம்பரம் கோவிலில் அட்டூழியம்..!

Report

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதியில் அப்பகுதிய சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளின் பிறந்தநாளிற்காக அர்ச்சனை செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கு தீட்சிதர் தர்ஷன் என்பவர் பூஜை செய்யும் பணியில் இருந்துள்ளார். இந்லையில் அவரிடம் குறித்த பெண் அர்ச்சனை தட்டை வழங்கியபோது அந்த தீட்சிதர் மந்திரம் எதுவும் கூறாமல் அமர்ந்து கொண்டே தீபாராதனை காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் அப்பெண் வினவியபோது குறித்த ஆபாசமாக பேரியதோடு , பெண் என்றும் பாராமல் அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, குறித்த பெண்மணி தனது செயினை பறிக்க வந்ததால் தான் தாக்கியதாக தீட்சிதர் கூறியுள்ளார்.

எனினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவ்வாறு நடக்கவில்லை என்றும், தீட்சிதர் தான் முறையாக பூஜைகள் செய்யாமல் அப்பெண்ணை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சார்பாக சிதம்பரம் பொலிஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டவன் சந்நதியில் இப்படி ஒருவரை தீட்சிதராக நியமித்துள்ளமை தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

2737 total views