திருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..! ஹோட்டலில் நேர்ந்த துயரம்..!

Report

இந்திய முறைபடி திருமணம் செய்ய இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் நேற்று காலை டெல்லியில் உள்ள உள்ள ஒரு ஹோட்டலில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவ பெண் துயாலி பாலி அன்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததாகவும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தனது காதலனுடன் இந்தியா வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை துயாலி பாலி மயக்க நிலையில் இருப்பதை பார்த்த காதலன் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்த பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்த பெண் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் கூறப்படுகின்றது.

5004 total views