கெஜ்ரிவால் பதவியேற்பில் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Report

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மீ அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

நாளை மறுதினம் அவரின் பதவியேற்பு விழா விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகளின் போது மஃப்ளர்மேன் என அழைக்கப்பட்ட ஒரு சிறுவன் மிகவும் பிரபலம் ஆனான். கெஜ்ரிவால் போன்று மப்ளர் அணிந்து வேடமிட்டிருந்த அந்த சிறுவன் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ட்ரெண்ட் ஆகினான்.

இதனையடுத்து , 16-ம் தேதி நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு மஃப்ளர்மேன் சிறுவனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆம் ஆத்மீ கட்சி “முக்கிய அறிவிப்பு: கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு மஃப்ளர்மேன் சிறப்பு விருந்தினராக அழைப்படுகிறார். அதே வேடத்தில் வாருங்கள் இளையவரே” என்று குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்தோர் அனைவரும் மஃப்ளர்மேனான குறித்த சிறுவனை பாராட்டுவதுடன் வழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது பெறுகிறது, இந்த மைதானத்திலிருந்து தான் அவர் அண்ணா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதேவேளை குறித்த இடத்தில் தான் முன்பு இரண்டு முறையும் முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளமைகுயும் குறிப்பிடத்தக்கது.

6186 total views