தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதலாவது நபர்!

Report

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு கொரோனாவுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.

இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

4042 total views