மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா

Report

தெலுங்கானா மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவரது பாதுகாவலருக்கு நோய்த்தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டது.

இன்று இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்றினை உறுதி செய்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற 'ஹரிதா ஹராம் ' மரம் நடும் விழாவில் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் பங்கேற்றார்.

இதுகுறித்து பதிலளித்த சுகாதார அமைச்சர் இ.ராஜேந்தர், வைரஸ் யாரையும் பாதிக்கக்கூடும் என்றார். ஏற்கனவே, பல எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சாதி, மதம், அந்தஸ்து மற்றும் பணம் இவற்றை கடந்து பரவுகிறது ' என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

693 total views