சீன ஆப்கள் தடை - இந்தியாவிடம் சீனா விடுக்கும் கோரிக்கை

Report

இந்தியாவில் 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தை தீவிரமாக கவனித்துவருகிறோம் என சீனா தெரிவித்துள்ளது.

டிக்டாக், யூசி ப்ரோசர், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன ஆப்களை இந்தியாவில் தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்தது.

இது தொடர்பில் மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன.

இந்த நிலையில் அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.

இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது.

எனவே தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாஹூ லிஜியன்,

‘வெளிநாடுகளில் தொழில் செய்யும் சீன தொழில்கள், அந்தந்த நாடுகளின் விதிகளைப் பின்பற்றவேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சர்வேதச முதலீட்டாளர்களின் சட்ட உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. சீன ஆப்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தை தீவிரமாக கவனித்துவருகிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

2319 total views