தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு தொற்று; 57 பேர் பலி

Report

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5005 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

674 total views