இந்தியாவில் 90 இலட்சத்தை தாண்டிய கொரோனா

Report

இந்தியாவில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.

அதன்படி 90 இலட்சத்தை தாண்டியது 84.23 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண் ணிக்கை 90 இலட்சத்து 04 ஆயிரத்து 365 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 84 இலட்சத்து 28 ஆயிரத்து 409 பேர் குணமடைந் துள்ளனர், 4 இலட்சத்து 43 ஆயிரத்து 794 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,32, 162 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

480 total views