இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது!

Report

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 90 இலட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 584 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதோடு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,162 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரே நாளில் 44,807 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,28,410 ஆக உயர்வடைந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2-வது அலையாக பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1,92,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,70,712 ஆக உயர்ந்துள்ளது.

335 total views