தங்கம் விலை- ஒரே நாளில் அதிரடி மாற்றம்!

Report

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 232 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 29 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

26564 total views