ஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்!

Report

ஓமான் விளைகுடாவில் இரண்டு எண்ணெய்க்கப்பல்கள் இன்று தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த எண்ணெய் கப்பலகள் மீது தாக்குதலை யார் நடத்தியது யா என்பது தெரிய வரவில்லை.

டோர்ப்பிட்டோ மற்றும் காந்தக்குண்டு மூலம் இந்த எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

நோர்வே நிறுவனத்திற்கு சொந்தமான புரண்ட் அல்டையர் என்ற எரிபொருள் டாங்கர், டோர்ப்பிட்டோ தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இது கட்டார் நாட்டிலிருந்து 75,000 தொன் பெட்ரோல்-இரசாயனங்களை ஏற்றியபடி தாய்லாந்திற்கு சென்றுள்ளது. எனினும், கப்பலின் உரிமையாளர், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மூழ்கவில்லையென கூறியுள்ளார்.

அத்துடன் மாலைதீவிற்கு சொந்தமான கப்பல் காந்தக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பலில் இருந்த 44 மாலுமிகளை மீட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ரானிற்கு விஜயம் செய்துள்ள யப்பான் பிரதமர் சின்ஷோ அபே, ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா கோமேனியை இன்று சந்தித்துள்ள நிலையில் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

13538 total views