ஜப்பானில் கண்ணாடி பாட்டிலில் இருந்து பல குழந்தைகளின் உடல்கள் மீட்பு!

Report
53Shares

ஜப்பான் நாட்டில் வீடு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டபோது நிலத்துக்கு அடியில் கண்ணாடி பாட்டில்களில் இருந்து பல குழந்தைகளின் உடல்கள் கிடைத்திருப்பதாக அந்நாட்டை சேர்ந்த க்யோடோ எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ நகரில் கடந்த 3 வருடங்களாக யாரும் வசிக்காத நிலையில் இருந்த வீட்டை மருத்துவர் ஒருவரிடம் இருந்து வேறொருவர் வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தொழிலாளர் ஒருவர் தரைக்கு அடியில் இருந்து 3 அல்லது 4 கண்ணாடி பாட்டில்களை கண்டெடுத்துள்ளார். அதில் பல குழந்தைகளின் உடல்கள் இறந்த நிலையில் உள்ளே வைக்கப்பட்டு இருந்த அதிர்சிகரமான விவரம் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளின் உடல்கள் வேதிப்பொருள் கொண்டு உடற்கூறியல் போல கண்ணாடிப் பொருளில் வைத்து பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளன.

அதில் சில சில குழந்தைகள் தொப்புள் கொடிகளுடன் இருந்துள்ளன.

தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த சம்பவம் பற்றி பொலிஸார் தரப்பில் விளக்கம் எதும் அளிக்கப்படவில்லை.

2531 total views