கர்ப்பிணி பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

Report
51Shares

திருமணமாகாத இளைஞரிடம் எப்போது உனக்கு திருமணம் நடக்கும் என தொடர்ந்து கேட்டு வந்த கர்ப்பிணி பெண்ணை ஆத்திரத்தில் இளைஞர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் பயிஸ் நுர்தின் (28). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் கர்ப்பிணி பெண்ணான ஆயிஷா (32)- வை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நுர்தின் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆயிஷா என்னிடம் அடிக்கடி, நீ எப்போது திருமணம் செய்து கொள்வாய் என கேட்பார்.

அதே போல சம்பவதன்று என் வீட்டு வாசலில் நான் உட்கார்ந்திருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஆயிஷா இங்குள்ள எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

உனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை, எப்போது நீ திருமணம் செய்து கொள்வாய் என கேட்டார்.

இது எனக்கு ஆயிஷா மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து ஆயிஷா வீட்டுக்கு நான் சென்றேன், பின்னர் அவரை கட்டிலில் தள்ளிவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்பின்னர் வீட்டிலிருந்த $59 பணத்தையும் நுர்தின் திருடியுள்ளார்.

நுர்தின் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

2233 total views